Tuesday, February 12, 2013

லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்...

லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்...

அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்குச் சொல்லித்தாருங்கள். ஆனால், பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.

பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது, கோழைத்தனம் என புரியவையுங்கள்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.

வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு.

ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்

அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். எனினும், உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.

அவனைக் கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்.

சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...

இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.

இப்படிக்கு,
ஆபிரகாம் லிங்கன்.

Friday, March 2, 2012

Muneer's Mind...: தாய் நாட்டின் துரோகிகளாக மாறும் கிறிக்கட் ரசிகர்கள...

Muneer's Mind...: தாய் நாட்டின் துரோகிகளாக மாறும் கிறிக்கட் ரசிகர்கள...: மு.கு:நடுநிலையான உள்ளத்துடன் வாசிக்கவும். நமது தாய்த்திருநாடு இலங்கை. இக்காலப்பகுதியில் இந்நாட்டுக்கு பெருமை சேர்த்து நம் நாட்டை உலகுக்க...

தாய் நாட்டின் துரோகிகளாக மாறும் கிறிக்கட் ரசிகர்கள்..

மு.கு:நடுநிலையான உள்ளத்துடன் வாசிக்கவும்.

நமது தாய்த்திருநாடு இலங்கை. இக்காலப்பகுதியில் இந்நாட்டுக்கு பெருமை சேர்த்து நம் நாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டும் முக்கிய காரணிகளாக இரண்டை கருதலாம் ,
1)தேயிலை 
2)கிரிக்கெட்
(இது எனது தனிப்பட்ட கணிப்பு அல்ல)இந்த இரண்டையுமே நமக்கு அறிமுகப்படித்திய பெருமை ஆங்கிலேயரையாரையே சாரும்.ஆனால் 15,16ம் நூற்றாண்டுகளில் இலங்கை உலக நாடுகளில் பிரபலமடடைய முக்கிய காரணம்'இலங்கையின் அமைவிடம்' ,அதனால் இலங்கை ஒரு வியாபார கேந்திர நிலையமாக அமைந்தது.அந்த நிலைமை தற்போது இல்லை,அதைப்பற்றி கதைப்பது இங்கு நோக்கமல்ல. 

இங்கு நாம் எடுத்து கொண்ட விடயம் கிரிக்கெட்டை பற்றியது.
இலங்கையின் குக்கிராமங்கள் தொடக்கம் மாநகரங்கள் வரை எல்லோராலும் விளையாடப்படும்,ரசிக்கப்படும் அன்றாட வாழ்க்கையோடு கலந்துவிட்ட ஒன்றாக இந்த கிரிக்கெட் மாறி விட்டது.

எனக்கு இந்த கிரிக்கெட் 94,95களில் எனது தந்தையின் மூலம் அறிமுகமானது,அப்போது விளையாடுவதில் மட்டுமே கூடுதல் ஆர்வம இருந்தது (பார்ப்பதை விட),பின்னர் 96 இல் இலங்கை அணி உலகக்கோப்பை வென்ற பின்னர் கிரிக்கெட்டை பார்ப்பதில் ஆவல் அதிகமானது.காலப்போக்கில் படிப்பதில் கவனம் செலுத்த தொடங்கியதால் கிரிக்கெட் விளையாடுவது நின்று விட்டது,ஆனால் பார்ப்பதில் உள்ள ஈடுபாடோ கூடிவிட்டது.இதற்கு இலங்கை அணியினரின் திறமையான விளையாட்டே முக்கிய காரணம்.

உதாரணமாக தற்போது உள்ள இலங்கை அணி வீரர்களின் துல்லியமான  விளையாட்டை பார்க்கும் போது இனம் புரியாத ஆனந்தம் ,அதே நேரம் சில நேரங்களில் அவர்களின் தவறுகளினாலோ அல்லது எதிர் அணியின் அதீத திறமையினாலோ ஏற்படும் தோல்விகளால் உண்டாகும் மன வேதனைகளிலும் ஒரு இன்பம் இருப்பதை உணர்ந்தேன்.(அதற்கு காரணம் நாட்டுப்பற்றின் வெளிப்பாடாக இருய்க்கலாம்)

இது ஒரு பக்கம் இருக்க,இன்னொன்றை சொல்ல வேண்டும்,இக்கிரிக்கேட்டானது குறிப்பாக நாடுகளுக்கிடையிலான போட்டியாகவே இருக்கும்,அந்த வகையில் நாம் நமது நாட்டுக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்பது நமது கடமை,ஆனால் இதற்கு மாற்றமான கருத்து ஓன்று நமது நாட்டின் பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் நிலவுகின்றது.வெளிப்படையாக சொல்வதென்றால் இந்து மக்கள் இந்திய அணிக்கும்,முஸ்லிம்கள் பாகிஸ்தான் அணியுக்கும் தனது ஆதரவை வெளிக்காட்டுவதாக.இது ஒரு கசப்பான உன்மையாகவே நான் காண்கிறேன்.(இந்நிலைமை சிறுபான்மை இன மக்களில் பெரும்பான்மையாக காணப்படுகிறது)இதை மறுக்க முடியாது,ஏனென்றால் இதற்கு சிறந்த அண்மைக்கால உதாரணம், சென்ற வருடம் நடைபெற்றா உலக கின்ன போட்டியிலேயே நல்ல ஆதாரங்கள் நமது மைதனங்களிலேயே கண்கூடாகவும்,ஊடகங்கள் மூலமாகவும் தெளிவாக அறியப்பட்டது.

விளையாட்டில் திறமையான வீரர்களை பாராட்டுவதோ,ரஷிப்பதிலோ,ஆதரவை தெரிவிப்பதிலோ தவறில்லை,ஆனால் இலங்கை அணியினருடன் மேற்குறிப்பிட்ட பிற நாட்டு அணிகள மோதும் போது நமது தாய் நாட்டுக்கு எதிர்ப்பையும் மற்ற நாட்டுக்கு ஆதரவையும் வெளிக்காட்டும் போது என் மனம் கொள்ளும் வேதனையும்,ஆத்திரமும் நியாயமானதாகவே இருக்கின்றது.

தாய் நாடானது நமது பெற்றெடுத்த நாட்டுக்கு ஈடானவள் என்பது பெரியோர் வாக்கு மட்டுமல்ல,நமது அடி மனதில் இருந்தே நமது நாட்டின் மீது அக்கறையும் ,அன்பும் இருக்க வேண்டியது கடமை.நமக்கு வாழ இடமளித்து,நாம் பிறந்த மண்நிட்கு நன்றி செளுத்தவிட்டலும்,துரோகமிளைக்காமலாவது இருக்க வேண்டும்.இந்த நாற்றுப்பட்ட்ரை வெளிக்காட்டும் ஒரு சிறந்த இடமாக,அந்த கிரிக்கட்டை நான் கருதுகிறேன்.

ஆனால் பலர் இந்தக்கருத்தை எதிர்க்கலாம்,,அப்படியானால் இந்த சின்ன விஷயத்திலேயே நாற்றுப்பட்ட்ரை காட்ட இயலாதவர்கள்,எப்படி நாட்டுக்காக   இரத்தம் சிந்த முன் வரப்போகிறார்கள்.நாட்டை எவ்வாறு காப்பற்றப்போகின்றார்கள்?? ஆதரவை வெளிக்காட்ட விட்டாலும் பரவாஇல்லை,நமது நாட்டுக்கு எதிர்ப்பை காட்டும் இந்த நன்றி கெட்டவர்களை துரோகிகளாகவே என் மனம் காண்கிறது.

அப்படிதான் திறமைக்கு ஆதரவு தெரிவிப்பவர்களாக இருந்தால்,நமது அணி எந்த கிரிக்கெட் அணிக்கும் சளைத்தது இல்லை என்பதை ஒவ்வொரு ஆட்டத்திலும் காணக்கூடியதாக உள்ளது,உதாரணமாக சங்கக்கார,மகேல,மலிங்க,தில்ஷான்,மேதிவ்ஸ்,சந்திமால்,திஷ்ஷர இவர்களின் விளையாட்டை எப்படி இந்த துரோகிகளால் ரசிக்க முடியாமல்,பாராட்ட முடியாமல்,ஆதரவை தெரிவிக்க முடியாமல் இருக்க முடிகின்றது.இப்படி ஒரு நாட்டில் வாழ்வதை பெருமைகொள்ள தெரியாதவர்கள்தான் அடி முட்டாள்கள்.

இவர்கள் ஒன்றை யோசிக்க வேண்டும்,எந்த இந்தியனாவது அல்லது எந்த பகிஸ்தானியாவது,தனது நாட்டுக்கேதிராக விளையாடும் எதிர் அணியினருக்கு ஆதரவையும் ,தனது நாட்டு அணிக்கு எதிர்ப்பையும் தெரிவிப்பார்கலா??

இவர்கள் சொல்லும் காரணங்களை பார்த்தல்,தமிழ் நாட்டிலிருந்தோ அல்லது பாகிஸ்தானிலிருந்தோ யாரும் இவர்களுக்கு உதவப்போவதில்லை,வெறும் பேச்சளவிலேயே இருக்கும்,நடைமுறையில் தாய் நாடு மட்டுமே வாழ வைக்கும்.அதற்காக இலங்கை அரசாங்கத்தை பிடிக்கவில்லை அதனால் எதிர்க்கிறோம் என்பது குறுகிய சிந்தனைக்காரார்களின் காரணமாக இருக்கும்.அவர்களுடைய மனச்சாட்சி பதில் சொல்லவில்லையா? இது எனது நீண்ட நாள் மன வேதனை.

இந்தப்பிளவு உண்மையில் ஆரோக்கியமான ஒன்றாக நான் கருதவில்லை,,ஏற்கனவே நாம் அனுபவித்த துர்ப்பாக்கிய நிலைக்கு காரணியாக அமைந்து விடாமல் யோசித்து செயற்பட வேண்டியது நம் கடமை,நாடு என்று வரும் போது இந்த இனபெதத்தையும்,மொழி பேதத்தையும் கொஞ்சம் ஓறம்கட்டிவைப்பது நமக்கும் நல்லது நமது நாட்டுக்கும் நல்லது.நாம் எல்லாம் ஒரு தாய் மக்களாக ,சகோதரர்களாக வாழ ஆசைபாடுகிறேண்.

ஒரு விதத்தில் நான் அதிர்ஷ்ட சாலி எனக்கு கிடைத்த நெருக்கமான நண்பர்கள் அனைவரும் நாட்டுப்பற்று உள்ளவர்கள்..

பி.கு:தமிழ் பிழைகளை மன்னிக்கவும்.

Thursday, March 1, 2012

Muneer's Mind...: கன்னிப் பிரவேசம்..

Muneer's Mind...: கன்னிப் பிரவேசம்..: இது என்னுடைய கன்னிப் பதிவு (3/1/2012).நான் 3 வருட காலமாக வலைப்பதிவுகளை வாசிப்பதில் ஈடுபாடு கொண்டுள்ளேன்.இவ்வளவு காலமும் வாசிப்பதில் மட்டுமே ...

Wednesday, February 29, 2012

கன்னிப் பிரவேசம்..

இது என்னுடைய கன்னிப் பதிவு (3/1/2012).நான் 3 வருட காலமாக வலைப்பதிவுகளை வாசிப்பதில் ஈடுபாடு கொண்டுள்ளேன்.இவ்வளவு காலமும் வாசிப்பதில் மட்டுமே அக்கறை கொண்ட எனக்கு வலைப்பதிவை ஆரம்பிப்பதில் தயக்கம் இருந்தது,அதற்கு நிராகரிக்க முடியாத காரணங்களும் இருந்தது,அதில் முதன்மை காரணம்"நான் வாசித்த பல பதிவுகள் நிகரில்லாத தரத்தை கொண்டதாக இருந்தமையினால் ஏற்பட்ட ஒரு வகை தாழ்வு மனப்பாங்கு".

பிறகு புரிந்து கொண்டேன்.ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன்,மற்ற மனிதனுக்கு நிகரற்றவன்(இந்த தனித்துவ தன்மையினால் பெருமை ஏற்பட்டு விடக்கூடாது).ஒவ்வொருத்தருக்கும் தனித்துவமான,வேறுபட்ட சிந்தனை,ரசனை,வெளிப்பாடு,விருப்பு,வெறுப்பு உண்டென்பதை.இந்த தனித்துவத்தால் பல நன்மைகள் இருப்பினும்,கருத்து வேருபாட்டுக்கும்,முரண்பாட்டுக்கும் அடிப்படையாக அமைந்து விட்டது.
அதற்காக முரண்பாட்டை ஆரோக்கியமற்றது என்று சொல்ல வில்லை.அந்த முறண்பாட்டை வெளிப்படுத்தும் வழிகளிலும்,சந்தர்ப்பங்களிலும் ஏற்படும் வேறுபாடுகளினால் பிரிவினைகளும்,பிரச்சனைகளும் ஏற்படுவதாக தோன்றுகின்றது.

அந்த அடிப்படையில் எனது மனதின் நிலைப்பாட்டை,வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாக வலைப்பதிவை பயன் படுத்தலாம் என்பதை புறிந்து கொண்டேன். 

lol:இனி என்னுடைய கொடுமை உங்களை கொடுமைப்படுத்தும் என நம்புகிறேன்.

பி.கு:எனது தமிழில் ஏற்படும் பிழைகளை தயவு செய்து மன்னிக்கவும்.