Wednesday, February 29, 2012

கன்னிப் பிரவேசம்..

இது என்னுடைய கன்னிப் பதிவு (3/1/2012).நான் 3 வருட காலமாக வலைப்பதிவுகளை வாசிப்பதில் ஈடுபாடு கொண்டுள்ளேன்.இவ்வளவு காலமும் வாசிப்பதில் மட்டுமே அக்கறை கொண்ட எனக்கு வலைப்பதிவை ஆரம்பிப்பதில் தயக்கம் இருந்தது,அதற்கு நிராகரிக்க முடியாத காரணங்களும் இருந்தது,அதில் முதன்மை காரணம்"நான் வாசித்த பல பதிவுகள் நிகரில்லாத தரத்தை கொண்டதாக இருந்தமையினால் ஏற்பட்ட ஒரு வகை தாழ்வு மனப்பாங்கு".

பிறகு புரிந்து கொண்டேன்.ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன்,மற்ற மனிதனுக்கு நிகரற்றவன்(இந்த தனித்துவ தன்மையினால் பெருமை ஏற்பட்டு விடக்கூடாது).ஒவ்வொருத்தருக்கும் தனித்துவமான,வேறுபட்ட சிந்தனை,ரசனை,வெளிப்பாடு,விருப்பு,வெறுப்பு உண்டென்பதை.இந்த தனித்துவத்தால் பல நன்மைகள் இருப்பினும்,கருத்து வேருபாட்டுக்கும்,முரண்பாட்டுக்கும் அடிப்படையாக அமைந்து விட்டது.
அதற்காக முரண்பாட்டை ஆரோக்கியமற்றது என்று சொல்ல வில்லை.அந்த முறண்பாட்டை வெளிப்படுத்தும் வழிகளிலும்,சந்தர்ப்பங்களிலும் ஏற்படும் வேறுபாடுகளினால் பிரிவினைகளும்,பிரச்சனைகளும் ஏற்படுவதாக தோன்றுகின்றது.

அந்த அடிப்படையில் எனது மனதின் நிலைப்பாட்டை,வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாக வலைப்பதிவை பயன் படுத்தலாம் என்பதை புறிந்து கொண்டேன். 

lol:இனி என்னுடைய கொடுமை உங்களை கொடுமைப்படுத்தும் என நம்புகிறேன்.

பி.கு:எனது தமிழில் ஏற்படும் பிழைகளை தயவு செய்து மன்னிக்கவும்.

6 comments:

  1. உங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துபவர்களுடைய மனம் விசாலமானது என அறிவேன்.மிக்க நன்றி கோபி..

      Delete
  2. ஆரோக்கியமான தமிழ்.. அழகிய நோக்கம்..Superb'da!

    ReplyDelete
    Replies
    1. உன்னுடைய பெறுமதியான வாழ்த்து என்னை ஊக்கப்படுத்துகிறது,மிக்க நன்றி நண்பா..

      Delete
  3. எனக்கு இந்த வரி றொம்ப பிடித்திருக்கு (எனது தமிழில் ஏற்படும் பிழைகளை தயவு செய்து மன்னிக்கவும்
    )

    ReplyDelete
  4. தவறு செய்வதவன் மன்னிப்பு கேட்பதுதானே நியாயம்..
    நன்றி..

    ReplyDelete